ஆலங்குளம் பேரூராட்சி உறுப்பினர்கள் மீது தலைவி சுதா போலீஸ் எஸ்பி யிடம் புகார்
ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.
ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மீது பேரூராட்சி தலைவி சுதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருபவர் சுதா. இவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி ஆலங்குளம் காவல் நிலையத்தில் 9வது வார்டு உறுப்பினர் சுபாஸ் சந்திர போஸ் காவல் நிலையத்தில் தலைவி மீது புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவராக உள்ள தன்னை கடந்த 25-ம் தேதி நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9-வது வார்டு கவுன்சிலரான சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் 12-வது வார்டு கவுன்சிலரான சாலமோன் ராஜா மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் சேர்ந்து கூட்டத்தை நடத்த விடாமல் தகராறில் ஈடுபட்ட நிலையில், தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் ஒருமையில் பேசி மிரட்டிய நிலையில், கூட்டத்தை ஒருபோதும் நடத்த விட மாட்டோம் என கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும், நாள்தோறும் பேரூராட்சி மன்ற பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வரும் அக்னி சர்வீஸ் ட்ரஸ்ட் என்ற அமைப்புக்கு தற்போது மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வரும் ஊதியத்தொகை குறித்தான வரவு செலவு கணக்கு குறித்து தான் கேட்ட நிலையில், இது போன்ற தகராறில் அவர்கள் ஈடுபடுவதாகவும், ஆகவே தொடர்ந்து தன் மீது அவதூறுகளை பரப்பி தன்னை மிரட்டி வரும் அந்த கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் எனது கையெழுத்தை போலியாக போட்டு எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இது புகார் மனு தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu