ஆலங்குளம் வட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் தேதி மாற்றம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கோப்பு படம்).
தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் திட்டமானது இரண்டாம் கட்டமாக கிராம ஊரக பகுதிகளில் 11.07.2024 முதல் 29.08.2024 வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 221 கிராம ஊரக பகுதிகளில், மொத்தம் 51 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தென்காசிமாவட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெட்டூர் சமுதாய நலக்கூடத்தில் கீழ்கண்ட ஊராட்சிகளுக்கு 06.08.2024 அன்று நடைபெறுவதாக இருந்த மக்களுடன் முதல்வர் முகாம் ,அந்த ஊராட்சியைச் சார்ந்த பொது மக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வழிபட்டு 06.08.2024 அன்று காலை மீள ஊருக்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் வேறொரு நாளில் முகாம் நடத்த பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் மேற்கண்ட ஊராட்சியில் முகாம் நடை பெற இருந்த நாள் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.
வட்டாரம்:ஆலங்குளம்
முகாம் நடைபெறும் இடம்:சமுதாய நலக்கூடம்.
நெட்டூர்.
முகாம் நடைபெறும் நாள்:29.08.2024
பயனடையும் ஊராட்சிகள்: நெட்டூர்
அய்யனார்குளம், சுப்பையாபுரம், நாரணபுரம், குறிப்பன்குளம், மேலவீராணம், கிடாரக்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெறும். இதனை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் செய்தி குறிப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu