ஆலங்குளம் அருகே நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் 342 பயனாளிகளுக்கு சான்றளிப்பு

ஆலங்குளம் அருகே நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் 342 பயனாளிகளுக்கு சான்றளிப்பு
X

தென்காசி தெற்கு மாவட்டம் சிவலார்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தள்ளுபடி சான்றிதழ்  வழங்கிய ஆலங்குளம் யூனியன்சேர்மன் திவ்யாமணிகண்டன் மாவட்ட செயலர் சிவபத்மநாதன். 

நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் 342 பயனாளிகளுக்கு ரூ 1 .19 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது

தென்காசி தெற்கு மாவட்டம் சிவலார்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தமிழக முதல்வர் பொது நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் 342 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நகையை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பூல்பாண்டியன், ஆலங்குளம் நகரச் செயலாளர் எஸ். பி. டி நெல்சன், ஒன்றியக்குழு உறுப்பினர் கலாகண்ணன் சண்முகராம் , மீனா சந்தானம், மாறாந்தை ஊராட்சி மன்ற தலைவர் , மீனா சுப்ரமணியன், புதுப்பட்டி தமாரியப்பன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆலடி மானா , மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி