தம்பி தலையில் கல்லை போட்டு கொலை -அண்ணன் கைது

தம்பி தலையில் கல்லை போட்டு கொலை -அண்ணன் கைது
X

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் தம்பி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவர் காலனி பகுதியில் வசித்து வரும் கண்ணன் (33) என்பவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் உடன்பிறந்த சகோதரரான சூடாமணி என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சூடாமணி கோபத்தில் வடக்குவாசெல்வி அம்மன் கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த தனது தம்பியான கண்ணனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.இதுகுறித்து கண்ணனின் தாயார் ஊத்துமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி செல்லத்துரை என்பவரின் மகனான சூடாமணி (47) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story