வாக்கு கேட்டு சைக்கிள் பேரணி

வாக்கு கேட்டு சைக்கிள் பேரணி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு ஆதரவாக ஆலடிப்பட்டி கிராம மக்கள் மிதிவண்டியில் சென்று வாக்கு சேகரித்தனர். முன்னதாக பேரணியை திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தொடங்கி வைத்தார். பேரணி ஆலடிப்பட்டி, நல்லூர், குருவன்கோட்டை வழியாக ஆலங்குளம் சென்றடைந்தது. மிதிவண்டியில் சென்றவர்கள் வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இந்த மிதிவண்டி பேரணியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு