பீடி தொழிலாளர்கள் பேரவை சிறப்பு கூட்டம்

பீடி தொழிலாளர்கள் பேரவை சிறப்பு கூட்டம்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கம் வட்டார சிஐடியூ சிறப்பு பேரவைக் கூட்டம் வர்த்தக சங்க அலுவலகத்தில் நடைபெற்றது .

கூட்டத்திற்கு மாரியப்பன் தலைமை தாங்கினார். பால்ராஜ், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை கூட்டத்தை சிபிஎம் ஆலங்குளம் தாலுகா செயலாளர் குணசீலன் துவக்கி வைத்தார். ஆரியமுல்லை, பீடி சங்க தென்காசி மாவட்ட பொருளாளர் ,ராமசாமி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைதலைவர் பாலு தீண்டாமை ஓழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேரவையில் பீடி சங்கத்தின் ஆலங்குளம் வட்டார தலைவராக பால்ராஜ், செயலாளராக பரமசிவன், பொருளாளராக சண்முகம், உதவித் தலைவர்களாக மாரியப்பன், ராமசாமி, அருணாசலம் , வள்ளியம்மாள், அருள்ராஜ், துணைச்செயலாளர்களாக மேகலா, லிங்கராஜ், சங்கர், வள்ளிமயில், சசிகலா மற்றும்10 வட்டார கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையை சிஐடியூ மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன் முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அருள்ராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா