நள்ளிரவில் காட்டுக்குள் சென்று பூஜை செய்ய முயற்சி: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடனாநதி நீர்த்தேக்கம் உள்ளது. கொரோனாபரவல் தடை சட்டம் காரணமாக அணைப்பகுதி சுற்றியுள்ள இடங்களுக்கு பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 3 இளம்பெண்கள் ஆறு மாத குழந்தையுடன் அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அவர்களை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அவர்கள் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது அந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்கள் சிவகாசியை சேர்ந்தவர்கள் என்றும், அப்பா, பையன், மருமகள், மற்றும் பேரக்குழந்தைகள் என்று தெரிய வந்தது. அவர்களை இன்று காலை மீண்டும் விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
அணை பகுதியில் பகல் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் இரவு நேரத்தில் அடைக்கப்பட்டிருந்த அணைப்பகுதியில் கதவுகள் எப்படி திறக்கப்பட்டது எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu