43 வருடங்களுப்பின் நெகிழ்ச்சியுடன் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் 43 வருடங்களுக்கு முன்பு கல்வி பயின்ற மாணவர்கள் சந்தித்துக்கொண்ட நிகழ்வு
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல் மாணவர்கள் 43 வருடங்களுக்குப் பின்னர் நெகிழ்ச்சியோடு சந்தித்தனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் 1977 -ஆம் ஆண்டு முதல் 1980 -ஆம் ஆண்டு வரை வணிகவியல் படித்த முன்னாள் மாணவர்கள் 35 பேர் ஒருங்கிணைந்து நெகிழ்ச்சியோடு சந்தித்தனர். தொடக்கமாக ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து கருத்துகளை பரிமாறி கொண்டனர்.
பின்னர் தாங்கள் படித்த கல்லூரி ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரி முன்பு அமைந்துள்ள கல்லூரி நிறுவனர் அனந்த ராமகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து தாங்கள் படித்த கல்லூரி மற்றும் வகுப்பறையை சுற்றிப் பார்த்து மலரும் நினைவுகளை அசைபோட்டனர். பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்நிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் 43 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறோம் பழைய நண்பர்களை நேரில் பார்ப்பது பரவசமானது. 42 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய நட்பை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றனர்
பின்பு கல்லூரியின் நூலகத்தில் வைத்து நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் கூட்டத்திற்கு கல்லூரி செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் முருகானந்தம் , ஸ்ரீ பெருமகல்யாணி நர்சரி மற்றும் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்..42 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த முன்னாள் மாணவர்கள் அனைவரையும் கணேசன், சுப்பிரமணியன், தங்கராஜ், பெரியசாமி, முத்துக்குமார், முருகையா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu