ஆலங்குளத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஆலங்குளத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X

ஆலங்குளம் பள்ளியில்  நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட குழு புகைப்படம்.

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பேரவை கூட்டம் நடந்தது

தெண்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பேரவை கூட்டம் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ஜேசுஜெகன் தலைமை வகித்தார். உபதேசியார் ஜேசுகுட்டி தாலத் ஆரம்ப ஜெபம் செய்தார். முதல்வர் வில்சன் வரவேற்று பேசினார்.

கல்லூரி முன்னாள் மாணவர்கள் பேரவை தலைவர் எஸ்.எம்.வி.மயில் ராஜன், செயலாளர் சாந்தகுமார், துணை செயலாளர் யுனேசிகிளாரா, பொருளாளர் பிரின்ஸ், துணை பொருளாளர் டோமினிக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த விழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் தங்கள் படிக்க வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.முடிவில் ஒருங்கிணைப்பாளர் விஜய் ஸ்டான்லி நன்றி கூறினார். சுரேஷ்சாலமோன் ஜெபம் செய்தார்.

Tags

Next Story