சாலை மற்றும் சாக்கடை வசதி ஏற்படுத்தி தராத ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம்

சாலை மற்றும் சாக்கடை வசதி ஏற்படுத்தி தராத ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம்
X

சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்.

Sewerage System- சாலை, சாக்கடை வசதி செய்து தர வேண்டி ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

Sewerage System- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான பழைய வார்டு- 13 புதிய வார்டு- 2, மாரியம்மன் கோவில் தெரு, டிபிவி மில் மேல்புறம் தெருவில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. ரோடு வசதியும் இல்லை. மழைநீர் செல்லவும் வழியில்லை. இப்பகுதியில் புதியதாக சாலை அமைப்பதற்கும், கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி செய்து தர வேண்டி ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கவுன்சிலரிடம் பொதுமக்கள் சார்பாக பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

வாக்களித்த பொதுமக்களுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் செயல் அலுவலர் , கவுன்சிலர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூ க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!