ஆலங்குளம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு

ஆலங்குளம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு
X
ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது சண்முகபுரம். இந்த ஊரைச் சார்ந்தவர்கள் கண்ணன், பூபாலன், தங்கராஜ். இவர்கள் அனைவரும் உறவினர்கள். இவர்களது குழந்தைகளான புவன் (4) இஷாந்த் (5) சண்முகபிரியா (எ) இந்துமதி ஆகிய 3 பேரும் வீட்டின் அருகே உள்ள கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென குழந்தைகளைக் காணவில்லை. இதனை தொடர்ந்து உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். குழந்தைகள் அருகே உள்ள பட்டர் குளத்திற்கு செல்லும் வழியில் சென்றதாக தகவல் கிடைக்கவே அங்கு சென்று தேடினார். குளத்தில் குழந்தைகளின் சட்டை மிதந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் அப்பகுதியில் தேடினார்கள். அப்போது குளத்தில் இருந்து மூன்று குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டது.

குழந்தைகளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!