தென்காசி - முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்

தென்காசி - முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
X

ஆலங்குளத்தில் முதியவரை போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்

தென்காசி - ஆலங்குளத்தில் 2 நாட்களாக சுற்றி திரிந்த முதியவரை போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 2 நாட்களாக சுற்றி திரிந்த முதியவரை ஆலங்குளம் போலீசார் உதவியுடன் ஆலங்குளம் பசுமை இயக்க தன்னார்வலர்கள் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலைய பகுதியில் கடந்த 2 நாட்களாக முதியவர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவருக்கு உணவளித்து வந்த போலீசார் அவரை குறித்த தகவலை சேகரித்துள்ளனர்.முதியவர் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனையடுத்து ஆலங்குளம் பசுமை இயக்க தலைவர் சாமுவேல் பிரபு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர் ஐசக் இம்மானுவேல் ஆகியோர் மூலம் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

பாப்பாக்குடி பகுதி சென்ற பசுமை இயக்க தன்னார்வலர்கள் அந்த பகுதியில் விசாரித்ததில் கீழப்பாப்பாக்குடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தனம் மகன் பரமசிவன் (76) என தெரியவந்தது. அவரது மகன் கனேசனிடம் ஒப்படைத்தனர். கடந்த 2 நாட்கள் முன்பு மருத்துவமனை போவதாக கூறி சென்றவர் திரும்பவில்லை இதனால் வீட்டில் உள்ளவர் அருகில் உள்ள ஊர்களில் தேடி வந்துள்ளனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!