ஆலங்குளம்: போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது

ஆலங்குளம்: போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது
X

கோப்புப்படம்

ஆலங்குளத்தில் விற்பனைக்காக போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பீடிகள் தயாரித்து விற்பனை செய்வதாக அந்த பீடி நிறுவனத்தின் மேலாளர் அப்துல் அஜீஸ் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக போலி பீடிகளை வைத்திருந்த காளத்திமடம் பகுதியை சேர்ந்த முருகன், குருவன் கோட்டை பகுதியைச் சேர்ந்த லிங்கம், அசோக் @ பிரான்சிஸ் (26), அன்பு @ சொரிமுத்து (29), கருப்பசாமி (29) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த மோகன் ஆகிய ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் அசோக் @ பிரான்சிஸ், அன்பு @ சொரிமுத்து, மற்றும் கருப்பசாமி ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 6,30,000 ரூபாய் மதிப்பிலான போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!