ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியை கைப்பற்றிய அதிமுக: திமுகவினர் சாலை மறியல்

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியை கைப்பற்றிய  அதிமுக: திமுகவினர் சாலை மறியல்
X

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் தேர்தலை நிறுத்தக்கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் தேர்தலை நிறுத்தக்கோரி திமுகவினர் சாலை மறியல்.

தென்காசி மாவட்டம ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் தேர்தலை நிறுத்தக்கோரி திமுகவினர் சாலை மறியல், தடியடி.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஒன்பது வார்டுகளில் அதிமுகவும், 5 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் ஆழ்வார்குறிச்சி தேர்தலை திமுக நிறுத்த முயற்சிப்பதாக அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து தலைவர் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுக சார்பில் 2வது வார்டில் வெற்றி பெற்ற சரசு என்பவர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டார். இதில் அதிமுக பெரும்பான்மையாக இருந்ததால் ஒருமனதாக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து திமுக வார்டு உறுப்பினர்கள் தேர்தலை நிறுத்தக்கோரி காவல்துறையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!