அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

கால்வாயில் பாதி வரை இறங்கிய அரசுப் பேருந்து
தென்காசி மாவட்டம், கடையம் அருகே ஸ்டியரிங் நட் முறிந்து போனதால் ஓடைக்குள் பாய்ந்த அரசு பேருந்தை ஓட்டுனர் சாதுரியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
தென்காசி மாவட்டம், கடையத்திலிருந்து நெல்லை தாமிரபரணி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து, இன்று காலை நெல்லைக்கு புறப்பட்டது. இந்த அரசு பஸ்ஸில் 30 பயணிகள் பயணித்தனர். அரசு பஸ் கடையம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் ரவணசமுத்திரம் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்குள்ள ஐயம்பிள்ளை குளத்திற்கு செல்லும் கால்வாயை நோக்கி சென்றது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். ஆனால், அதிருஷ்ட வசமாக அந்த பேருந்து கால்வாய் பாலத்தின் சுவரில் தட்டி நின்றது. இதனால் கால்வாயில் கவிழாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பேருந்து ஸ்டியரிங் நட் முறிந்து போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கால்வாய்க்குள் பேருந்து கவிழாமவ் சாதுரியமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலை மிக குறுகியதாக உள்ளது. மேலும் இந்த வழித்தடத்தில் இந்த வகை அரசு பேருந்துகள் திரும்புவதற்கு மிக கடினமாக இருக்கும், இதற்கு முன்பு ஓடிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu