தென்காசி அருகே மூன்று பேரை கடித்த கரடி மர்மமான முறையில் உயிரிழப்பு
Mysterious Deaths -தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் அடிக்கடி கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து மக்களுக்கு தொல்லை தருவது உண்டு. சில நேரங்களில் விலங்குகள் பயிர்களையும் சேதப்படுத்திவிட்டு சென்று விடும். இந்நிலையில் கடையம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்பு என்ற ஊருக்குள் புகுந்த கரடி மூன்று பேரை தாக்கி காயப்படுத்தியது.
கரடி தாக்கியதில் காயம் அடைந்தவர்களுக்கு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன் அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நல்ல முறையில ்சிகிச்சை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
அந்தக் கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பிடிபட்ட கரடி மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூவரை தாக்கிய கரடி நேற்று முன்தினம் இரவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது. நேற்று மாலை அந்த கரடி உயிரிழந்ததாக வனத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரடியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோது கரடியின் மூக்கு, நுரையீரல் பகுதியில் ரத்தகாயம் இருந்ததாகவும் குடலில் விஷம் இருந்ததற்கான சாத்திய கூறுகள் மற்றும் அதிக ரத்தகசிவு குடல் பகுதியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு கரடி எதனால் மரணம் உயிரிழந்தது என்பது குறித்து தெளிவான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும் . ஆனால் காயம் இருந்தது குடலில் விஷம் இருந்தது என்று சொல்லப்பட்டு உண்மை மறைக்கப்படுகிறது.
எதனால் கரடி உயிரிழந்தது என்பதை பட்டவர்த்தனமாக தெரிவிக்க அதிகாரிகளுக்கு ஏன் தயக்கம் என்றும் யாரைக் காப்பாற்ற இப்படி சாக்குப் போக்கு சொல்கிறார்கள் என்றும் புரியவில்லை எனவும் பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
இதில் நிச்சயம் மனித உரிமை மீறல் இல்லை காரணம் கரடி மனிதன் அல்லவே ஆகவே, உண்மையைச் சொல்ல வனத்துறையினருக்கு ஏன் தயக்கம் என்பது புரியவில்லை.
பாபநாசம் அருகே திருப்பணிகரிசல்குளம் என்ற பகுதியில் மின் வசதி இல்லை என்று எழுந்த புகாரை தொடர்ந்து அங்கு உடனடியாக மின் வசதி கொடுக்கப்பட வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அது குறித்து வனத்துறை மேல்முறையீடு செய்யாமல் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதைப் போல கரடியின் சாவிலும் மர்மம் இருப்பது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu