60 முட்டைகள் மீது 50 யோகாசனம் - சிறுமி உலக சாதனை

60 முட்டைகள் மீது 50 யோகாசனம் - சிறுமி உலக சாதனை
X

தென்காசி மாவட்டத்தில் 60 முட்டைகள் மீது 50 யோகாசனங்களை செய்து 6 வயது சிறுமி உலக சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி செந்தில்குமார்- மாலதி. செந்தில்குமார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இவர்களுக்கு உதித்நிறைஞ்சன் (10), என்ற மகனும், அஸ்விதா(6) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்விதாவிற்கும் யோகாசனம் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தின் காரணமாக அஸ்விதாவை,மாஸ்டர் மருதுபாண்டியன் என்பவரிடம் யோகா பயிற்சி மேற்கொள்ள வைத்தனர்.

கொரோனா கால விடுமுறையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அஸ்விதா 6 மாதங்களில் யோகாசன பயிற்சியில் கைதேர்ந்தவரானார். தான் பயின்ற யோகாசனம் மூலம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த மாணவி அஸ்விதாவிற்காக கரம் நீட்டியது நோபல் வேல்ர்டு ரிக்கார்டு அமைப்பு. இதற்காக மாணவி அஸ்விதா பயின்று வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் யோகாசன உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தன்னுடன் பயிலும் சக மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் , ஆசிரிய ஆசிரியைகள் முன்னிலையில் நோபல் வேல்ர்டு ரெக்கார்டு அமைப்பின் கௌதம் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினார். இதில் 9.32 நிமிடங்களில் 60 முட்டைகள் மீது 50 யோகாசனங்களை செய்து அஸ்விதா உலக சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து சாதனை படைத்த சிறுமி அஸ்விதாவுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறுமியை அனைவரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.

Tags

Next Story
ai marketing future