கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது

கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது
X

வினோத் (எ) முகம்மது நசிப், ரவி (எ) சலீம், ராஜ்குமார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள லட்சுமியூரில் தேவி சக்தி அம்மன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு மடத்தூர் பகுதியில் கடையம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லட்சுமியூரை சேர்ந்த ராஜ்குமார் என்பரை பிடித்து விசாரணை செய்ததில், நாகர்கோவில் அருகே உள்ள தக்கலை பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற முகமது நசிப், சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற சலீம் ஆகியோர் ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்றதும் மேலும் பல பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றதாகவும் ஒப்புக் கொண்டதின் பேரில் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story