ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில்23 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்றுகிறது.

இதில் சுயேச்சை வேட்பாளர்களாக 4 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1வது வார்டு செல்வக் கொடி, இரண்டாவது வார்டு பாலசரஸ்வதி, 3வது வார்டு வள்ளியம்மாள், 5-ஆவது வார்டு பால் துரை, எட்டாவது வார்டு மலர்கொடி, ஒன்பதாவது வார்டு முத்துமாரி, 10-ஆவது வார்டு ஷேக் முகம்மது, 12வது வார்டு சுபாஷ்சந்திரபோஸ், 13வது வார்டு திவ்யா, 14வது வார்டு ஆறுமுகச்சாமி, 15-ஆவது வார்டு கிருஷ்ணவேணி, 18-வது வார்டு எழில்வாணன், 19-வார்டு பசுபதி தேவி, 21வது வார்டு சண்முக ராம், 22வது வார்டு சங்கீதா, 23வது வார்டு மீனா

ஆறாவது வார்டு அந்தோணிசாமி, ஏழாவது வார்டு கிருஷ்ணம்மாள், 11வது வார்டு முருகேஸ்வரி, 16வது வார்டு சுப்புகுட்டி, நாலாவது வார்டு உறுப்பினர் முரளிதரன், 17 வது வார்டில் போட்டியிட்ட கலா 20 வார்டில் ஹரிநாராயணன் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags

Next Story
ai marketing future