தென்காசியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

தென்காசியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
X
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில், பெண்ணிடம் தகராறு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோத்தல முத்து மகன் நிறைகுளத்தான் (37) மற்றும் வேவி என்பவரின் மகன் வசந்த்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் மீது, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, ஆலங்குளம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னரசுவுக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார்.

அதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story