ஆலங்குளம் - கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

ஆலங்குளம் - கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
X

ஆலங்குளம் - கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

கொரானோ ஊரடங்கு உத்தரவு-மக்கள் கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பதை தவிர்க்க சிறப்பு முகாம்

கொரானோ ஊரடங்கு உத்தரவு காலமாக இருப்பதால் மக்கள் கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பதைத் தவிர்க்க சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடுக்களுக்கு நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாயமான்குறிச்சி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சுபாஷ் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் வீரபாண்டியன், ராமசெல்வம், ஆகியோர் அக்கிராமத்தில் உள்ள ஆடுகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்