வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தேங்காய் வியாபாரி வீட்டில் சுமார் 50 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பூமணி. தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவியோடு நேற்று மதுரை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த மகன் சங்கர் பாவூர்சத்திரம் அருகே உள்ள புங்கம்பட்டிக்கு தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மதியத்திற்கு மேல் வீடு திரும்பிய சங்கர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் உள்ளே இருந்த சுமார் 50 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் 1 லட்ச ரூபாய் திருடு போனது தெரிய வந்துள்ளது.இது குறித்து சங்கர் பாவூர்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu