ஆலங்குளம் - திருமணம் பிடிக்காததால் இளைஞர் தற்கொலை.

ஆலங்குளம் - திருமணம் பிடிக்காததால் இளைஞர் தற்கொலை.
X

ஆலங்குளம் தற்கொலை -மோதிலால் மகன் இசக்கிராஜ் @ இம்மானுவேல்

மணப்பெண் பிடிக்காததால் மரணத்தை தழுவிய இளைஞன்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மணப்பெண் பிடிக்காததால் இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குளம் அருகே மோதிலால் மகன் இசக்கிராஜ் என்ற இம்மானுவேல் 35. இவருக்கும் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் இசக்கிராஜை காணவில்லையாம். உறவினர்கள் அக்கம் பக்கம் தேடிய நிலையில் கீழக் குத்தப்பாஞ்சான் சாலையில் உள்ள கிணற்று அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் கிடந்துள்ளது.

கிணற்றில் தற்கொலை செய்ய விழுந்திருக்கலாம் என்ற நோக்கில் ஆலங்குளம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளிக்கப் பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலைவேல் தலைமையில் வீரர்கள் வந்து கிணற்றில் தேடி இசக்கிராஜை சடலமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!