வீடு வீடாக இலவசமாக காய்கறிகள் விநியோகம்.

வீடு வீடாக இலவசமாக காய்கறிகள்  விநியோகம்.
X
மண்ணு சாப்பிட போறத... மனுஷன் சாப்பி்டட்டுமே..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள தினசரி சந்தையில் 150க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரை செயல்பட அரசு அறிவித்தது. இதனால் விவசாயிகள் விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வருவதிலும் விற்பனை செய்வதிலும் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மார்க்கெட் கமிட்டியினர் உத்தரவு படி 15-ம் தேதி முதல் மார்க்கெட் மூடப்பட்டது.அன்று முதல் விவசாயிகள் யாரும் காய்கறிகளை விற்பனைக்கும் கொண்டு வரவில்லை.

காய்கறிகளை வாங்கிச் செல்ல வியாபாரிகளும் வரவில்லை. இந்நிலையில் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடந்த சுமார் 30 டன்னுக்கும் மேற்பட்ட அனைத்து காய்கறிகளையும் கடை உரிமையாளர்கள் கீழப்பாவூரில் உள்ள பொதுமக்களுக்கு வாகனத்தில் கொண்டு சென்று கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று இலவசமாக வழங்கினர்.

மதியம் 2மணி முதல் இரவு 9 மணி வரை சந்தையை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Tags

Next Story