தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோலப்போட்டி நடந்தது. இதில் வீரகேரளம்புதூர் வட்டம் பங்களாசுரண்டை பேரன் புரூக் மேல்நிலை பள்ளியிலிருந்து எட்டு நபர்கள் வீதம் ஐந்து குழுக்களாக மொத்தம் 40 மாணவியர்கள் கலந்து கொண்டனர் . இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டினார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வரையப்பட்டிருந்த கோலங்களை பார்வையிட்டு பள்ளி மாணவிகளிடம் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடல் நடத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் தொடர்ந்து ஈடுபட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என உற்சாகப்படுத்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!