திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வேட்பு மனு தாக்கல்

திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வேட்பு மனு தாக்கல்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்று வரும் போது,

ஆலங்குளம் பகுதியில் ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கபடும். ஆலங்குளம் நகர் பகுதியில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மிக பெரிய வணிக வளாகம் அமைக்கப்படும். கடையம் தாலுகாவாக தரம் உயர்த்தப்படும். கடையம், பாப்பாகுடி, கீழப்பாவூர் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றபடும். இராமநதி- ஜம்பு நதி இணைப்பு திட்டம் தடைப்பட்டு உள்ளது. அது விரைவில் நிறைவேற்றபடும் இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உடன் இருந்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!