பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலை பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் ‌. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா, சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, தலைமையாசிரியர் செளந்தரராஜன் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‌பங்களாச்சுரண்டை பள்ளியில் இருந்து கீழச்சுரண்டை, அரண்மனை, அண்ணா சிலை, காமராஜர் சாலை, செங்கோட்டை ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் வந்தனர்.

பேரணியின் போது டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா அறிவுரைகள் வழங்கினார். பேரணியில் சுரண்டை வருவாய்ஆய்வாளர் மாரியப்பன், விஏஓ.,கள் வெள்ளபாண்டி, ஆறுமுகம், கருப்பசாமி, கிராம உதவியாளர்கள் ஜேம்ஸ் கற்பகம், பரமசிவபாண்டி மாரியம்மாள் என்எஸ்எஸ் அலுவலர் அதிசயராஜ், ஆசிரியர்கள் சௌந்தர், சாமுவேல் சுகுமார் செல்வராஜ், விக்டர், ஜோயல், ஜெபஎபனேசர், வேல்சாமி ,செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project