காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: நெற்பயிர்கள் நாசம்

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: நெற்பயிர்கள் நாசம்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து, துத்திகுளம் சாலையில் ராமர் கோவில் அருகே சமூக வனக்காடுகள் உள்ளது. இந்தக் காடுகளில் மான், கடமான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதன் அருகே உள்ள விளை நிலங்களில் பல ஏக்கரில் விவசாயிகள் தற்போது நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதியில் காட்டு பன்றிகள் புகுந்து நெற்பயிரை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று காட்டு விலங்குகளால் பயிர்கள் சேதம் செய்யப்படுவதால் அரசு உரிய நிவாரணம் தர வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்