பாஜக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

பாஜக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாஜக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் ராமராஜா தலைமையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ் மற்றும் பொறுப்பாளர் பாலகுருநாதன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலச் செயலாளர் சண்முகராஜ் கலந்து கொண்டு பேசினார். தேர்தலின் போது செய்ய வேண்டிய பணிகள், பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் , ஆலங்குளம் ஒன்றிய தலைவர் பண்டரிநாதன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவர் மாறவர்மன், கடையம் கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தினகுமார், கடையம் மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன்,பாப்பாக்குடி ஒன்றிய பொதுச் செயலாளர் முருகன் மற்றும் தென்காசி மாவட்ட மகளிர் அணி துணை தலைவி வளர்மதி, தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india