இஸ்லாமிய அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

இஸ்லாமிய அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்
X
கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்க ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் புகார்

நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக கல்யாண ராமன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி இஸ்லாமிய இயக்கங்கள் ஜமாஅத்கள் கூட்டமைப்பு சார்பாக ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் பத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் ஹயாத் அன்சர், ஒன்றிய செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் இக்பால், இந்திய தேசிய முஸ்லீம் லீக் கடையம் ஒன்றிய செயலாளர் அகமது, இளைஞரணி செயலாளர் அன்சாரி, தமுமுக மாவட்ட நிர்வாகி சலீம்,ஜாக் ஜமாத் செயலாளர் சிராஜ்தீன், பொட்டல்புதூர் ஜமாத் நிர்வாகி இபு உட்பட பலர் புகார் மனுக்களை அளித்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare