சீட் தராததால் தனித்து களமிறங்கிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்

சீட் தராததால் தனித்து களமிறங்கிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்
X

கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் செய்த மகாலிங்கம்.

கடையம் ஒன்றியத்தில், கட்சியில் சீட் கிடைக்காததால் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், மகாலிங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9 -ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 நாட்களாக மந்த நிலையில் காணப்பட்ட வேட்புமனு தாக்கல், இன்று களைகட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் கடையம் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் என்பவர் அக்கட்சியின் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு கட்சியினர் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இன்று மகாலிங்கம் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இவர் மனு தாக்கல் செய்தது கடையம் பகுதி அ.தி.மு.க வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!