தென்காசி மாவட்டத்தில் 70.40% வாக்குகள் பதிவாகி உள்ளது
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள 440 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்காக நடந்த தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 632 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
6 மணிக்கு தேர்தல் முடிவு பெற்று வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது.
இறுதியாக 6 நகராட்சிகளில் 68.63 சதவிகித வாக்குகளும், பேரூராட்சிகளில் 73.14 சதவிகித வாக்குகள் என மொத்தம் 70.40% வாக்குகள் பதிவானது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் நடைபெற்ற தேர்தலின் போது ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக பிரச்சனை எழுந்தது. தேர்தல் முடிந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை கேட்டு பூத் ஏஜெண்டுகள் கையெழுத்திடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வதில் காலதாமதம் ஆனது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மின்னனு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் 70.40% வாக்குப் பதிவு விபரங்கள்:-
1.தென்காசி நகராட்சி - 63.14%
2.செங்கோட்டை நகராட்சி - 70.21%
3.கடையநல்லூர் நகராட்சி - 63.35%
4.புளியங்குடி நகராட்சி - 70.92%
5. சங்கரன்கோவில் நகராட்சி - 74.28%
6. சுரண்டை நகராட்சி - 79.99%
பேரூராட்சிகளின் வாக்குப் பதிவு விபரம் :-
1.அச்சம் புதூர் - 72.45%
2.ஆலங்குளம் - 74.52%
3. ஆழ்வார்குறிச்சி - 72.22%
4. ஆய்குடி - 73.87%
5. குற்றாலம் - 84.37%
6. இலஞ்சி - 77.25%
7. கீழப்பாவூர் - 79.03%
8. மேலகரம் - 61.71%
9. பண்பொழி - 74.42%
10. எஸ். புதூர் - 75.22%
11. இராயகிரி - 69.81%
12. சாம்பவர்வடகரை - 74.23%
13. சிவகிரி - 71.57%
14. சுந்தரபாண்டியபுரம் - 75.58%
15. திருவேங்கடம் - 77.29%
16. வடகரை கீழப்பிடாகை - 68.29%
17. வாசுதேவநல்லூர் - 73.26%
மொத்த வாக்காளர்கள் - 5,00,973
பதிவான வாக்குகள் - 3,52,671.
பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 22-ம் தேதி அன்று அந்தந்த பகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu