செங்கோட்டை ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

செங்கோட்டை ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. எளிதாக திமுக ஒன்றிய சேர்மன் பதவியை பிடித்தது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது இதில் திமுக நான்கு இடங்களிலும் ,திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

1வது வார்டு சுப்புராஜ், இரண்டாவது வார்டு திருச்செல்வி, நாலாவது வார்டு வள்ளியம்மாள், 5வது வார்டு கலா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3வது வார்டில் கன்னிமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செங்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!