குருவிகுளம் ஊராட்சியில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
பைல் படம்
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இதில் சேர்மன் பதவியை பிடிக்க போவது யார் என குழப்பம் நீடிக்கிறது.
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளது. இதில் திமுக 6 இடங்களிலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 10 இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் உள்ளதால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சேர்மன் பதவியை பகிர்ந்து கொள்வார்களா அல்லது திமுக வுடன் இணைந்து சேர்மன் தேர்தலை சந்திப்பார்களா என்கிற குழப்பம் நீடிக்கிறது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சியான அதிமுக இதில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில்
முத்துசாமி, மனோகரன், கனகராஜ், கணேசன், செல்வி, முத்துலட்சுமி ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள். காங்கிரஸ் கவுன்சிலர் முருகேஸ்வரி இரண்டாவது வார்டு அருள்குமார், 3வது வார்டில் சங்கீதா, 4 வது வார்டில் சித்ரா, 5 வது வார்டில் கனகேஸ்வரி, 8வது வார்டில் கிருஷ்ணம்மாள், 9வது வார்டில் விஜயலட்சுமி, 11 வது வார்டில் மணிமாலா, 12வது வார்டில் விஜயலட்சுமி, 14 வது வார்டில் வீரலட்சுமி, 17 வது வார்டில் ராமலட்சுமி ஆகிய சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu