தென்காசி: திமுக – 3, அதிமுக- 2 தொகுகளில் வெற்றி

தென்காசி: திமுக – 3, அதிமுக- 2 தொகுகளில் வெற்றி
X

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக - 3தொகுதிகளிலும் அதிமுக - 2 தொகுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.




தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கொடிகுறிச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல்கள் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.




இதில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் (89315) அதிமுக வேட்பாளர் செல்வமோகந்தாஸ் பாண்டியனை(88945) விட 370 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் (74153), திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை (70614) விட 3539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி (88474) திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி வேட்பாளர் முகமது அபூபக்கரை (64125) விட 24439 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் போட்டியிட்ட சதன் திருமலைக்குமார் (68730) அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோகரனை (66363) விட 2367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜா ( 71184) அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமியை (65830)விட 4354 வாக்குகள் அதிகம் வெற்றி பெற்றார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!