சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 23 நபர்கள் கைது

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 23 நபர்கள் கைது
X

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 23 நபர்களை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 93 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!