குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை

குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை
X

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது .இதனால் சுற்றுலா பயணிகள் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்தது விழுகிறது.

மெயினருவியில் தண்ணீர் பாதுகாப்பு அளவையும் தாண்டி விழுகிறது. அதேபோன்று பழைய குற்றால அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!