ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

தென்காசி மாவட்ட ஆட்சியர் பெயரில் இயங்கி வந்த போலி பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன். இவர் கடந்த நவம்பர் மாதம் தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார். இவர் பேஸ்புக் கணக்கில் சமீரன் என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். இதனிடையே அவரது பெயரில் போலி கணக்கு உருவாக்கி நண்பர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி கணக்கு குறித்து சைபர் கிரைமில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலி கணக்கானது முடக்கப்பட்டது. மேலும் அவரது போலி கணக்கிலிருந்து ஏதும் குறுஞ்செய்தி வந்தால் யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்