தென்காசி வட்டார நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள்

தென்காசி வட்டார நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள்
X
தென்காசி வட்டார நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

தென்காசி வட்டார நூலகமும், நடராஜ் அகாடமியும் இணைந்து தென்காசி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பினை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் காலை 11 மணி முதல் 1.30 மணிவரை பயிற்சி நடைபெறும். இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் 82202 75333, 99443 17543 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இது குறித்து தென்காசி வ உ சி வட்டார நூலகர் பிரம்மநாயகம் கூறியதாவது,


தமிழக அரசின் ஆணையின்படி சமுக இடைவெளியுடன், முககவசம் அணிந்து பயிற்சி நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நூலகம் மூலம் பயிற்சி பெற்று 85 பேர் அரசுப்பணி பெற்றுள்ளனர். அந்த சாதனை தொடர வேண்டும். நம் தென்காசி பகுதியில் பட்டதாரிகள் வேலைவாய்ப்புகள் பெற வேண்டும், அதற்கு தென்காசி நூலகமும் காரணமாக இருக்க வேண்டும். என்கிற நோக்கில் இப்பயிற்சி தொடங்கப் பட்டுள்ளது . போட்டித்தேர்விற்கு தயாராகும் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டுகிறோம். தமிழக முதல்வர் அவர்களால் பாராட்டப்பட்ட நடராஜ் அகடாமி பயிற்சி அளிக்க இருப்பதும் இன்னும் சிறப்பு என்று கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்