தென்காசி: நூலக முப்பெரும் விழா

தென்காசி: நூலக முப்பெரும் விழா
X
நூலக முப்பெரும் விழாவில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் துவக்கம், புரவலர்கள் சேர்க்கை, ரூபாய் 90,000 மதிப்பிற்கு நன்கொடைகள் என முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், நடராஜ் அகாடமி, மேலகரம் முத்துநாயகம் அறக்கட்டளை, குற்றாலம் சாரல் ரோட்டரி கிளப், அரசு அலுவலர் ஓன்றியம், நிழல்கள் அமைப்பு, சான்றோன் சமூகநல அறக்கட்டளை, வாசகர் வட்டம் இணைந்து நூலக முப்பெரும் விழாவை நடத்தியது .

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தொடக்க விழா, நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா, குடியரசு தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் நூலகத்தில் அதிக நூல்களை படித்து பயன்பெற்று வரும் மாணவமாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா மாவட்ட நூலக அலுவலர் வயலட் தலைமையில் நடைபெற்றது.

நூலக முப்பெரும் விழாவில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் துவக்கம், புரவலர்கள் சேர்க்கை, ரூபாய் 90,000 மதிப்பிற்கு நன்கொடைகள் பெற்றது என முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.

முத்துநாயகம் அறக்கட்டளை சேர்மன் பரமேஸ்வரன், மயிலேறும்பெருமாள், சங்கரன், நூலக ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்புரை ஆற்றி நூலக வளர்ச்சி அறிக்கை அளித்தார்.

ஏ.வி.கே. கல்விகுழுமம் டிரஸ்ட் சேர்மன் டாக்டர்.அய்யாத்துரை பாண்டியன் விழாப் பேருரை ஆற்றினார்.

பயிற்சி மையத்திற்கு அடிப்படை தேவையான பிளாஸ்டிக் நாற்காலிகள், டெஸ்க் ரூ.90,000 மதிப்பிற்கும், பயிற்சிக்கு தேவையான மனோராம இயர்புக் உள்ளிட்ட புத்தகங்கள் அளிக்க உள்ளதாக டாக்டர்.அய்யாதுரை பாண்டியன் அறிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு புதன், வியாழன் கிழமைகளிலும் வேளாண்மை தேர்வுகளுக்கு சனி, ஞாயிறு கிழமைகளிலும் இலவச பயிற்சி வழங்கப்படும் என நடராஜ் பயிற்சி மைய இயக்குனர் நடராஜ சுப்பிரமணியன் கூறினார், அத்துடன் தேர்வுகள் குறித்து விளக்கி வினாவிடை தொகுப்பு நூல்களை மாணவர்களுக்கு வழங்கினார். நன்கொடையாளர்களை பாராட்டி கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.

விழாவில் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், குற்றாலம் சாரல் ரோட்டரி கிளப் தலைவர் லட்சுமிநாராயணன், செயலாளர் சுப்புராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் உள்ளிட்ட பல வாசகர்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். விழாவின் ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, பாலசுப்பிரமணியன், ராஜேஸ்வரி, வாசகர் வட்ட நிர்வாகிகள் சலீம், குழந்தைஜேசு, முருகேசன், ராஜி, சவுந்தர்யா செய்திருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil