எங்களுக்கு பேருந்து வசதி இல்லையா ? மலைவாழ் மக்கள் கேள்வி

எங்களுக்கு பேருந்து வசதி இல்லையா ? மலைவாழ் மக்கள்  கேள்வி
X

பாபநாசம் மலைப்பகுதியில் சேர்வலாறு மலைப்பகுதிக்கு பேருந்து வசதி செய்யப்படாதது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஊரடங்கு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் சேர்வலாறு பகுதிக்கு பேருந்து போக்குவரத்து இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமிழக அரசு தலைமைச் செயலகத்திற்கும் நெல்லை மாவட்ட ஆட்சியர் , சேர்மாதேவி சார்ஆட்சியர் மற்றும் போக்குவரத்து உயர் அதிகாரிகள் அனைவருக்கும் பலமுறை நேரில் சந்தித்து புகார் செய்தும் தபால் மூலம் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் , தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் அவசர நேரங்களில் கடும் அவதி பட்டு வருகிறார்கள். இதனால் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!