டாஸ்மாக் நிர்வாக சீரமைப்பு: தமிழக அரசின் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வரவேற்பு..

டாஸ்மாக் நிறுவன லோகோ.
TASMAC News Today Tamil -டாஸ்மாக் நிறுவனத்தை தமிழக அரசு சீரமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அரசின் அந்தத் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுசாமி வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
தமிழக அரசின் கீழ் இயங்கும், 50 அரசு பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராயவும், நிர்வாக சீர்திருத்தம் செய்து, அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில், டாஸ்மாக் மதுபான மொத்த விற்பனையும், சில்லறை விற்பனையும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதற்கான பணி, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக அரசு குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அரசுக்கு, அந்த தனியார் நிறுவனம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அரசுக் குறிப்பு அறிவிக்கிறது. அரசு பொது நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்திடதமிழக நிதி அமைச்சர் வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் அறிவிப்பு கூறுகிறது.
அரசின் இந்த முடிவை தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் முழுமனதுடன் வரவேற்கிறது. டாஸ்மாக்கை பொறுத்தவரையில் முழு மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் நடைபெறுகின்ற ஊழல் அங்கிருந்து தொடங்கி மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு சரக்குகள் அனுப்பப்படும் வரை பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது.
பணிகள் தனியாருக்கு ஒப்பந்தங்கள் விடுவதில் நிகழும் முறைகேடுகள் ஊர் அறிந்த ஒன்றாகும். மேலும் பார் டெண்டர்களை விடுவதில் ஊழல், டெண்டர் விடாமலேயே கள்ளத்தனமாக சட்டத்திற்கு புறம்பாக பார்களை நடத்துவதும் ஊரறிந்த ஒன்றாகும்.
இடையில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் ஆகியோர்களின் அப்பட்டமான கொள்ளை இவ்வளவு முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருந்து கொண்டு லஞ்ச லாவண்யத்தில் திளைக்கின்ற அதிகாரிகள் என டாஸ்மாக் ஒரு கொள்ளைக்காடாக மாறி உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு தொடர்ந்து நிகழ்ந்து வருவதும் உண்மையாகும்.
இந்தக் காரனங்களுக்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாக சீரமைப்பு குழு (ADMINISTRATIVE REFORM COMMISSION) ஒன்றை அமைத்திட வேண்டும் என தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அரசுக்கும், நிர்வாகத்திற்கும் பல காலங்களாக எழுதியுள்ளது. ஆனால் பயன் ஏதும் இல்லை.
தற்போது நிர்வாக சீர்திருத்தம் குறித்து அமைக்கப்படும் தனியார் நிறுவனம் சார்ந்த குழு டாஸ்மாக்கில் இயங்கும் சங்கங்களையும் அழைத்து பேசுவதற்கும் பணியாளர்களின் பணிநிலை, ஊதிய நிலை, பணிமாறுதல் கொள்கை ஆகியவை குறித்தும் பரிசீலத்திடவும் வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இந்த வேண்டுகோளை உரிய முறையில் பரிசீலித்து ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். டாஸ்மாக் நிர்வாகத்தை புனரமைக்க தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu