தமிழகத்தில் தடுப்பூசி பணி பல இடங்களில் நிறுத்தம்: சுகாதார செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் தடுப்பூசி பணி பல இடங்களில் நிறுத்தம்: சுகாதார செயலாளர் விளக்கம்!
X
தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது தொடரப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இருந்து 1.01 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டன. அதில் 98 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசிடம் 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி செலுத்தும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தமிழகத்தில் தடுப்பூசி மிகக் குறைந்த அளவிலே உள்ளன. இந்த மாதத்திற்கும், மத்திய தொகுப்பில் இருந்து 42 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.

மாநில அரசிடம் போதிய அளவில் தடுப்பூசி இல்லை. மத்திய தொகுப்பின் அடுத்தக்கட்ட தடுப்பூசிகள் நாளை (9ந் தேதி) வர உள்ளன. அந்த தடுப்பூசிகளை விரைந்து அளிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

#Tamilnadu #VaccinationWork #halted #severalPlaces #HealthSecretary #explain

#தமிழகத்தில் #தடுப்பூசிபணி #நிறுத்தம் #சுகாதாரசெயலாளர் #விளக்கம் #Instanews #staysafe #stayhome #corona #coronavaccine #covid

Tags

Next Story