14ம் தேதி முதல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாணமை துறை அரசாணையின்படி கொரோனா நாடு முழுவதும் பரவலாக இருந்ததன் காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வுநடத்தப்பட மாட்டாது என முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மாணவருக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற உள்ளது. மாணவர்கள் சேர்க்கையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்களும் வழங்க வேண்டியுள்ளது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பு அறைகளை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.
மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது என பல்வேறு பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 14ம் தேதி முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu