தமிழ்நாட்டின் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.11, 559 கோடி

தமிழ்நாட்டின் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.11, 559 கோடி
X

பைல் படம்.

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹ 1,87,035 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி ₹ 38,440 கோடி, எஸ்ஜிஎஸ்டி ₹ 47,412 கோடி, ஐஜிஎஸ்டி ₹ 89,158 கோடி (செஸ் ₹ 34,972 கோடி உட்பட).

ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ₹45,864 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ₹37,959 கோடியும் அரசு செட்டில் செய்துள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஏப்ரல் 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ₹84,304 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ₹85,371 கோடியும் ஆகும்.

ஏப்ரல் 2023க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும்.

முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 ஏப்ரல் 20ந்தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 68,228 கோடி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (இதே தேதியில்) அதிகபட்ச ஒற்றை நாள் கட்டணம் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 57,846 கோடியாக இருந்தது.

ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,559 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரியில், ரூ.218 கோடி வசூலாகி இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிக வசூலாகும்.

பிரதமர் பாராட்டு:

ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.87 லட்சம் கோடி என்ற தகவல் "இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நிதியமைச்சகத்தின் ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர், "இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த செய்தி! குறைந்த வரி விகிதங்களுக்கு இடையில், வரி வசூல் அதிகரித்து வருவது, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்து, ஜிஎஸ்டி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!