தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்: மத்திய அமைச்சர்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்: மத்திய அமைச்சர்
X

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா. 

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 79 ஆயிரத்து 3 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் இந்த ஆண்டு கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினர் திரு ஏ.கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், 2022 ஆம் ஆண்டு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 40,593 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காயும், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் 1083 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காயும் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு அரவை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.10,590 ஆக இருந்தது என்றும், இது 2023-ல் ரூ.10,860 ஆக உயர்த்தப்பட்டது என்றும் அவர் கூறினார். அரவைக்கு முந்தைய கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.11,000 ஆக இருந்தது என்றும், இது 2023-ல் ரூ.11,750 ஆக உயர்த்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!