பாடகி வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு

பாடகி வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு
X
மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்ததப்படும் என தமிழகக் காவல்துறை அறிவிப்பு

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.

பக்தி பாடல்களையும், தனி ஆல்பங்களையும் அவர் பாடியுள்ளார். வாணி ஜெயராம் 3 தேசிய விருது மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகளை வாங்கியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு சார்பில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கும் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் 3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற வாணி ஜெயராம் உடலுக்கும் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture