விளையாட்டு மைதானங்களில் இனி அரசு அனுமதி பெற்று மது அருந்தலாம்
காட்சி படம்
இதுகுறித்து உள்துறை அமைச்சக செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசு ஆணையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தது. F.L.12 என்ற லைசன்ஸுக்கான கட்டணம் அரசிதழில் இடம்பெற்றுள்ளது.
மது அருந்துவது என்பது பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே அனுமதியுடன் இயங்கி வந்தது. பிற பொது இடங்களில் மதுபானங்களை குடிக்க தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பல இடங்களில் திருமண மண்டபங்களில் bachelors party என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக மது விருந்து வைக்கப்பட்டு வருகிறது.
இதை முறைப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன. அது போல் காலி இடங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் பலர் கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஒரு நாள் நடத்தும் விழாவாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற்று சிறப்பு கட்டணம் செலுத்தி மது விருந்து அளிக்கலாம். விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu