தமிழகத்திற்கும் சதுரங்கத்திற்கும் வரலாற்று ரீதியாக தொடர்புள்ளது: பிரதமர் மோடி
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் போட்டியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதன்பின் விழாவில் வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி ,இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற திருக்குறளை மேற்கொள்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். 75வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் இந்தியாவுக்கு செஸ் ஒலிம்பியாட் வந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர். மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளது.
தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டுக்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். உலகிலேயே பழமையான மொழி தமிழ். தமிழ்நாட்டுக்கு வரலாற்று ரீதியாக செஸ் விளையாட்டுடன் தொடர்பு உள்ளது. செஸ் உருவான இடத்தில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது. பல விளையாட்டுப் போட்டிகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாசாரம் மேம்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள நமது வீரர்கள் வெற்றிகளை ஈட்டும் காலகட்டம் இது.
தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகம்" என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu