ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
X

பைல் படம்.

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலாளர் வெ. இறையன்பு இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

  • முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்
  • சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்
  • நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதல் அமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்
  • ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்
  • போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்
  • சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்
  • சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்
  • உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்.
  • பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். கே. மணிவாசன், அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • டாக்டர். பி. சந்திர மோகன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
  • கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமனம்

Tags

Next Story